Recent Comments

இராணுவ வாகனம்-தனியார் பேருந்து விபத்து; பேருந்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்



மாங்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் நிகழ்ந்த தனியார் பேருந்து, இராணுவ ட்ரக் விபத்தின்போது பேருந்தின் சாரதி, நடத்துநர், இன்னொருவரென மூவர் இராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.


நேற்றுக் காலை வவுனியாவிலிருந்து சுமார் 85 பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் இராணுவ முகாமிலிருந்து திருப்புவதற்கு முயன்ற இராணுவ ட்ரக்கும் விபத்தில் சிக்கிக் கொண்டன. இராணுவ ட்ரக் சமிக்ஞை எதுவுமின்றித் திடீரெனத் திருப்பப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த இராணுவ ட்ரக்கின் பக்கக் கண்ணாடி சேதமடைந்தது.


அத்துடன் விபத்தைத் தவிர்ப்பதற்காகப் பேருந்துச் சாரதி திடீர் முயற்சிகளில் ஈடுபட்டதால் பயணியொருவர் காயமுற்றார். நிலைமை இவ்வாறிருக்க விபத்துத் தொடர்பாக இராணு வத்தினருக்கு விளக்க முற்பட்ட பேருந்தின் சாரதி, நடத்துநர், மொழிபெயர்ப்புச் செய்ய முயன்ற ஒருவர் என மூன்று பேர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடைந்த கண்ணாடிக்குரிய பணத்தைத் தருமாறும் இராணுவத்தினர் வற்புறுத்தினர். ஆனால் தம்மீது எவ்வித தவறும் இல்லையெனவும் இராணுவ ட்ரக் திடீரெனத் திருப்பப்பட்டதால்தான் விபத்து ஏற்பட்டதெனவும் பேருந்துச் சாரதி எவ்வளவோ எடுத்துக் கூறியபோதிலும் இராணுவத்தினர் அதனை ஏற்கவில்லை யெனவும் தெரிய வருகின்றது.

இறுதியில் பேருந்துச் சாரதி உடைந்த கண்ணாடிக்குரிய பெறுமதியை வழங்குவதற்கு வேறு வழியின்றி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

About vadduvakal

0 comments:

Post a Comment

Popular Posts











சாரங்கா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி